Category Archives: மணிமேகலை

மணிமேகலையின் பிறப்பு – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

கோவலனுக்கு மாதவியிடத்து ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ‘மணிமேகலை’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். அப்பெயர் கோவலனுடைய குலதெய்வத்தினுடையதாகும். ஆம். கோவலனின் குலக்கொடியாகி விட்டாள் மாதவி. அதனால் அவனுடைய குல தெய்வத்தின் மீதும் உரிமை கொண்டாடி, அதன் பெயரைத் தன் குழந்தைக்கு வைத்தாள். கண்ணகியை மணந்தபின் சில ஆண்டுகள் அவளோடு கோவலன் வாழ்ந்தும் குழந்தைப்பேற்றினைப் பெற்றானில்லை.அதனால், … தொடர்ந்து வாசிக்க

( 1 ) கருத்துகள்

வீடு பேறு உணர்த்தும் மணிமேகலை – வாசுகி கண்ணப்பன் எம்.ஏ.,எம்.பில்.

தோற்றுவாய்; தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பல்வகையான இலக்கிய நூல்களில் ஐம்பெரும் காப்பியங்களும் பெரிதும் போற்றத்தக்கதாகும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரால் படைக்கப்பட்டது. பெளத்த மதத்தின் முதல் பெரும் காப்பியமாக போற்றப்படுவது. தலைசிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்துடன் இணைந்த காப்பியமாகும். அதனால் இது இரட்டைக் காப்பியத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிக முக்கியமாக, உலகிலேயே மிகக் கொடுமையான பசிப்பிணியைத் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்