Category Archives: மாதவியின் மாண்பு

மணிமேகலையின் பிறப்பு – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

கோவலனுக்கு மாதவியிடத்து ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ‘மணிமேகலை’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். அப்பெயர் கோவலனுடைய குலதெய்வத்தினுடையதாகும். ஆம். கோவலனின் குலக்கொடியாகி விட்டாள் மாதவி. அதனால் அவனுடைய குல தெய்வத்தின் மீதும் உரிமை கொண்டாடி, அதன் பெயரைத் தன் குழந்தைக்கு வைத்தாள். கண்ணகியை மணந்தபின் சில ஆண்டுகள் அவளோடு கோவலன் வாழ்ந்தும் குழந்தைப்பேற்றினைப் பெற்றானில்லை.அதனால், … தொடர்ந்து வாசிக்க

( 1 ) கருத்துகள்

கருணை மறவன் கோவலன் – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி

மாதவியின் மகள் பெயர் சூட்டு விழா நாளிலே,அந்தண முதயோன் ஒருவன், கலைச்செல்வியின் மணிவயிற்றில் உதித்த மணிமேகலையை வாழ்த்தி,கோவலனிடம் பொன்னும் பொருளும் பெற விரும்பி, மாதவியின் இல்லத்தை அடைந்தான். அம்மறையோன்,வேதாகம சாத்திரங்களைப் பழுதறப் பயின்றோன்;ஞானநெறிக்கு வரம்பெனத் திகழ்ந்தோன்: பாகனுக்கு அடங்காது சினங்கொண்டு திரிந்த மதயானை ஒன்று,அவனைத் தன் துதிக்கையில் பற்றிக் கொண்டு துன்புறுத்தியது. அந்த முதியோன் அலறி … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

பூம்புகார்க் கலைச்செல்வி மாதவி வாழ்ந்த காலத்தில் கலை கலைக்காக பயன்படுத்தப் பெற்றது.அதே நேரத்தில்,எளிய பொதுமக்களுக்காகவும் பயன்பட்டது. அதனாற்றான், நாட்டியக் கலையை ‘வேத்தியல் – பொதுவியல்’ என இருவகைப்படுத்தினர்.மாதவி, சோழ மன்னன் முன்பு வேத்தியலுக்கே முதன்மை தந்து ஆடினாள்.அரசவையில், வழக்கமாக அமரும் உரிமை பெற்ற ஐம்பெருங் குழுவினரும் அரசவைப் புலவர்களும் அவரவர்க்குரிய இடங்களில் அமர்ந்தனர் மற்றும்,மாதவியின் நடன … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்