Category Archives: சிலப்பதிகாரம் -எளிய உரை

மதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)

காடு காண் காதை *********************************************** தென்திசை நோக்கி சென்ற கோவலன்,கண்ணகி,கவுந்தியடிகள் ஆகிய மூவரும்,வழியில் மாங்காட்டு மறையோனைச் சந்தித்தனர்.வழியின் இயல்புகளை அவனிடம் கேட்டு அறிந்தனர்.கானுறை தெய்வம் வசந்தமாலையின் வடிவிலே தோன்றி,அவர்கள் மதுரை செல்வதைத் தடுக்க முயல்கிறது.ஆயினும்,அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் மேலும் நடந்து,ஐயையாளின் கோயிலை சென்று அடைகின்றனர் . 1.மண்டபத்தை அடைந்தனர் திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 16)

கட்டுரை முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும் தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும்,அவர்-தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும்,விண்ணவர் வரவும், 5 ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும்,அவர்-தம் தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும், பொய்யா வானம்,புதுப்புனல் பொழிதலும், அரங்கும்,ஆடலும்,தூக்கும்,வரியும், 10 பரந்துஇசை எய்திய பாரதி-விருத்தியும், திணைநிலை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 15)

16.கவுந்தியடிகள் இட்ட சாபம் தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக், காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, 230 ‘எள்ளுநர் போலும் இவர்,என்பூங் கோதையை, முள்உடைக் காட்டின் முதுநரி ஆக’ எனக் கவுந்தி இட்ட தவம்தரு சாபம், கட்டியது ஆதலின், பட்டதை அறியார், குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு 235 நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி, நெறியின் நீங்கியோர் … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்