நியூயார்க் வாசியை சென்னை வாசியாய் மாற்றிய சிலம்பு!

Kannagi and Eric__photo

இன்ஜினியரிங் பட்டம்,மென்பொருள் நிறுவனத்தில் வேளை,அமெரிக்க விசா என்பது இன்று ஒரு சராசரி இந்திய இளைஞனின் கனவு.இதற்கு மாறாக அமெரிக்காவின் நாகரிக நகரமான நியூயார்கில் பிறந்து,நம் நாட்டின் சிலப்பதிகாரம் மேல் காதல் கொண்டு,சென்னை வாசியாகி விட்டார் ஓர் அமெரிக்க இளைஞர்!

அவர் பெயர் எரிக் மில்லர்.நாட்டுப்புற கலைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா வந்தார்.வந்த இடத்தில்,அவரை கவர்ந்தது கண்ணகியின் கதை.சராசரி இந்திய ராஜா ராணி கதைப் போல் அல்லாது ஒரு சாதாரணக் குடிமகனின் கதை என்பது தான் சிலப்பதிகாரத்தில் தன்னை ஈர்த்த முதல் விஷயம் என்கிறார் எரிக்.எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு பெண்,நீதிக்கு போராடி வெற்றி பெரும் சிலம்பின் கதை,உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்பது எரிக்கின் ஆசை.

சிலப்பதிகார கதை மேல் நாட்டம் கொண்ட இவர்,பலமுறை கண்ணகி வாழ்ந்த இடங்களைத் தேடி,கண்ணகியை பற்றிய செய்திகளைச் சேகரித்து கொண்டு வருகிறார்.இந்த அனுபவத்தால் சென்னையில் இயங்கும் தன் ‘உலக கதை சொல்லும் நிலையம்’ மூலம் கண்ணகி வாழ்ந்த இடங்களுக்கு பலரையும் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

வருடந்தோறும் மெரினா கடற்கரையில் உள்ள சிலைகள் வழியே நடைபயணம் மேற்கொண்டு,சிலைகளில் உள்ள நம் நாட்டு தலைவர்கள்,புலவர்கள் பற்றிக் கதை சொல்லி விழிப்புணர்வை பரப்புகிறார்.அவர் இந்த பயணத்தை தொடங்குவதும் தன் நீதி தேவதையான கண்ணகியின் சிலை முன் தான்.கண்ணகி சிலை முன் ஓர் அயல் நாட்டவர் நின்று,கண்ணகி போல் பேசும் காட்சி,பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கிறது!

“உலகோர் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு”

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலம்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>