புகார்க் காண்டம்-நாடுகாண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)

8.பயணத்தை தொடங்கினார்கள்
kavunpray
தோம்அறு கடிஞையும்,சுவல்மேல் அறுவையும்,
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு,
‘மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆக’எனப் 100
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்-

குற்றமில்லாத பிச்சைப் பாத்திரத்தையும்,தோளில் மாட்டும் உறியையும்,மயில் தோகையையும் கவுந்தியடிகள் தன்னுடன் எடுத்துக் கொண்டார்.’மொழியின் பொருளாக விளங்கும் தெய்வம் நமக்கு வழித்துணையாக வரவேண்டும்’,என வேண்டினார்.பிறர் தன்னைப் பழிக்காத வண்ணம் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வரும் கவுந்தியடிகளுடன்,கோவலனும் கண்ணகியும் பயணத்தைத் தொடங்கினர்.

குறிப்பு
—————–

  1. தோம்-குற்றம்
  2. கடிஞை-பிச்சைப் பாத்திரம்
  3. சுவல்-தோள்
  4. அறுவை-உறி
  5. பீலி-மயில் தோகை
  6. பழிப்பு-பழித்தல்

-மீனாட்சி தேவராஜ்

This entry was posted in சிலப்பதிகாரத்தில் நடனம், சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம் and tagged , , . Bookmark the permalink.

Comments are closed.