சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரப் புகழ் பரப்பிய வரலாறு

சிலப்பதிகார இயக்கம்:

சிலப்பதிகார மாநாடுகள், சிலப்பதிகார வகுப்புகள்,சிலப்பதிகாரப் பேருரைகள், ஆய்வுகள் மூலமாக சிலப்பதிகார இயக்கத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. தமிழ் இலக்கியங்கள் பற்றிய மாநாடுகள், ம.பொ.சி.யின்
சிலப்பதிகார இயக்கத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளன.ஆனால் சிலப்பதிகாரத்திற்காக முதன்முதலில் மாநாட்டை ம.பொ.சி.தான் நடத்தினார். 24.3.1951 அன்று சென்னை,இராயப்பேட்டையில் கண்ணகி பந்தலில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,பேரறிஞர் ரா.பி. சேதுப்பிஷீமீளை, டாக்டர் சஞ்சீவி முதலான தமிழறிஞர்கள் பங்கேற்ற முதல் சிலப்பதிகார மாநாடு
நடைபெற ம.பொ.சி. ஏற்பாடு செய்தார்.

தமிழன் வரலாற்றில் முதன்முதலாக நடந்த சிலப்பதிகார மாநாடு என்று ம.பொ.சி. குறிப்பிட்டார். (சிலம்பில் ஈடுபட்டதெப்படி? 1994 ம.பொ.சி. 50) டாக்டர் மு.வ. தமது தலைமையுரையில் “பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மக்கள் மறைந்திருந்த கண்ணகி புகழ் மீண்டும் விளங்கத் தொடங்கியது.அத்துறையில் இது முதல் முயற்சி”.என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

22

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தைத் தேர்வு செய்து அதைப்பரப்புவதற்கு ஓர் இயக்கத்தை உருவாக்கியதற்கான காரணத்தை ம.பொ .சி. பின்வருமாறு விளக்கியுள்ளார்:

தமிழரசுக் கழகத்தின் சார்பில் காங்கிரஸ் பாரம்பரியத்தின் பிரதிநிதியாகவும் நின்று சிலப்பதிகார காப்பியத்தை மக்கள் மதிதியிலே கொண்டு வர நான் விரும்பியதற்குக் காரணமுண்டு. திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ நான் விரும்பாதவனல்லன். மனதார விரும்பக் கூடியவன்.ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த நான் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய இலக்கியம், தமிழில் உண்டென்றால் அது சிலப்பதிகாரம்தான் வேறில்லை.இளங்கோ தந்த சிலம்பு தமிழினத்தின் பொதுச்சொத்து.இந்தியாவின் ஒரே இலக்கியம். அதனால்தான் சிலப்பதிகாரத்தை ஒரு கருவியாகக்கொண்டு பொதுமக்கள் நடுவில் இலக்கிய இயக்கத்தைத் தொடங்கி வைத்தேன். (எனது போராட்டம் பக்கம் 547-548)

சிலப்பதிகாரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எதிர்ப்புப்போராட்டத்திற்கும் பயன்படுத்தினார் ம.பொ.சி.சிலப்பதிகாரத்தில் அல்வழிப்பட்ட அரசனை ஒழிப்பேன் என்று உறுத்தெழுந்து புரட்சி செய்த கண்ணகிபோன்று இன்று நம் தமிழ்ப்பெண்கள் ஆகிவிடுவார்களானால் இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமல்ல வேறு எந்த ஏகாதிபத்தியத்தையும் கூட அரை நொடியில் அழித்து முடிக்கலாம். தமிழகத்தில் தமிழரசு நிறுவலாம்.
இளங்கோவடிகள் அநீதியை எதிர்த்து நிற்கும் ஆண்மையை அரசியல் நெறியை, புரட்சிவழியை போதிக்கத்தான் சிலப்பதிகாரத்தைச் செய்திருப்பார். மற்றபடி ஊழின் வலிமையை உணர்த்துவதற்கோ செத்தவரை
எழுப்பும் கற்பின் பெருமையைச் செப்புவதற்கோ செய்திருக்கமாட்டார்.ஏனெனில் இத்தகைய கதைகள், நீதி நூல்கள் இளங்கோ காலத்திலும் இருந்தன. திருக்குறளைவிட இன்னொரு நீதிநூல் இயற்ற இளங்கோ எண்ணியிருப்பாரோ? புதிய பார்வையில் இலக்கிய நோக்கை ம.பொ.சி.அமைத்துக்கொண்டதற்கு சிலப்பதிகார இயக்கம் தலையாய சான்றாகும்.

This entry was posted in பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>