சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு ,நினைவு விழா & இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா & சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா

அக்டோபர் 3-ந்தேதி வெள்ளி கிழமை சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் விழா,இண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா,சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா சர் பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில் தொழில் அதிபரும்,ம.பொ.சி யின் தமிழ் அரசு கழகத்தின் உறுப்பினராக இருந்த திரு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்த பட்டது.

blog1

blog2

blog3

நீதியரசர் இராமசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.தமிழ் அறிஞர்கள் முனைவர் திரு.அவ்வை சண்முகம்,திரு.சிலம்பொலி செல்லப்பன்,திரு.வி.ஜி.சந்தோஷம்,திருக்குறள் தொண்டர் திரு.பா.செந்தில் ம.பொ.சி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.நீதியரசர் இராமசுப்ரமணியம் சிலப்பதிகார இயக்கத்தை திறந்து வைத்தார்.விழாவில் ‘ம.பொ.சி விருதை’ கவிக்கோ ஞானச்செல்வம் மற்றும் எஸ்.பாலசுப்ரமணியன் பெற்றனர்.விழாவிற்கு வந்தோரை திருக்குறள் தொண்டர் திரு.செந்தில் ம.பொ.சி வரவேற்று பேசினார்.சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் மகள் ம.பொ.சி.மாதவி பாஸ்‌கர் நன்றியுரை வழங்கினார்.

This entry was posted in இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா, நினைவு விழா. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>