மதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)

kklogo
கொலைக்களக் காதை

 

 

11.பொற்கொல்லன் சூழ்ச்சி

kk11

“கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை”,என, முன் போந்து,
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென்
சிறுகுடி லங்கண் இருமின் நீர் எனக்,
கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் 125
தேவ கோட்டச் சிறையகம் புக்கபின்
“கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப்,
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப்,
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யான்”,எனக்
கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் 130

 

கோவலன் வைத்திருந்த சிலம்பு,தான் முன்பு அரண்மனையில் திருடிய சிலம்பைப் போலவே இருந்ததை உணர்ந்தான் பொற்கொல்லன்.“பட்டத்து அரசியான கோப்பெருந்தேவியைத் தவிர இந்தச் சிலம்பு வேறு யாருக்கும் பொருந்தாது.வெற்றிச் சிறப்புப் பொருந்திய நம் அரசனிடம் நான் இதைத் தெரிவித்து வரும் வரை நீ இங்கே என் சிறு குடிலில் தங்கியிரு” ,எனக் கூறிச் சென்றான்.

கோவலனும் கீழ்மகனான அவனின் இருப்பிடம் அருகில் இருந்த கோயிலின் மதிலுள் சென்று தங்கினான்.

‘நான் வஞ்சகம் செய்து கவர்ந்த வந்த அரசியின் காற்சிலம்பு என்னிடம்தான் உள்ளது என்னும் செய்தி பிறருக்கு தெரிய வரும் முன்பு,வேறு ஊரிலிருந்து இங்கு வந்த இவன் மூலம் என் கள்ளத்தனத்தை நான் மறைப்பேன்’ என்று எண்ணி,சிறிதும் கவலைப்படாது பொற்கொல்லன் சென்றான்.

குறிப்பு

 1. யாப்புறவு-தகுதி
 2. அல்லதை-அல்லாமல்
 3. யான்-நான்
 4. போந்து-போய்
 5. விறல்-வெற்றி
 6. விளம்பி-கூறி
 7. குறுமகன்-கீழோன்
 8. சிறையகம்-சுற்றும் வேலியிட்ட காவலான இடம்
 9. தேவ கோட்டம்-கோயில்
 10. புக்க-நுழைந்த
 11. கரந்து-மறைத்து
 12. போக்குதல்-மறைத்தல்.
 13. புலம்பெயர்-தன் நிலத்திலிருந்து பெயர்ந்து(புலம்-நிலம்)
 14. கரந்தனன்-மறைந்து விட்டான்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>