1.கேட்டின் விளைவு
கோவேந்தன் தேவி !கொடுவினை யாட்டியேன்,
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்,
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய-காண்!
-நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக 5
முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள்
‘மன்னாதி மண்ணின் தேவியே!கணவனை இழந்த தீய விதியை உடைய எனக்கு உங்கள் தகுதிகள் பற்றி முன்னரே அறியவில்லை.ஆனாலும்,’பிறர் ஒருவருக்கு முற்பகல் ஒரு கேடு நினைத்தால்,அந்தக் கேட்டின் பயனை அன்று பிற்பகலே தானும் அனுபவித்துக் கெடுவான்’ ,என்பதை நேரில் கண்டேன்.தீவினையின் தன்மை இத்தகையது தான்!’,என்று கோப்பெருந்தேவியை நோக்கி கூறிய கண்ணகி,கற்புடைய மகளிரை பற்றிப் பேசத் தொடங்கினாள்….
நல்ல பகல்பொழுதில்,வன்னி மரத்தையும்,சமையல் அறையையும் தனக்குச் சாட்சிப் பொருட்களாக,அனைவர் முன்னிலையிலும் கொண்டுவந்து காட்டினாள்,அடர்ந்த கூந்தலையுடைய பத்தினிப் பெண்ணொருத்தி.
குறிப்பு
- கோ வேந்தன்-மன்னர் மன்னன் (கோ-மன்னன் வேந்தன்-மன்னன்)
- கொடுவினை-கொடுமையான வினை
- காண்குறூஉம்-காண்பார்
- மடைப்பளி-மடைப்பள்ளி,சமையலறை
- மொய்-அடர்ந்த
- குழலாள்-கூந்தல் உடையவள்
- மீனாட்சி தேவராஜ்
தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in
Please correct the spelling mistakes
sure