வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)

ndkநடுகற் காதை

3.காதலிகள் காட்டிய அன்பு


ndk2
அகிலுண விரித்த அம்மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20
மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த

இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்,
கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில்
திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும்,
மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் 25
ஏந்துபூண் மார்பின் இளையோர்க் களித்துக்

‘நறுமணம் கொண்ட அகிற்புகை போடுவதற்காகத் தன் அழகிய கூந்தலை விரிக்கிறாள் காதலி.கரிய மேகம் போல விரிந்த கூந்தலின் பின்னால் இருக்கும் அவள் முகம் நிலவு போல தோன்றுகிறது.அந்த நிலவில்,புருவமாகிய வளைந்த கருமையான வில்லை காண்கிறேன்!அதன் கீழ்,மகர மீன் கொடியுடைய மன்மதனின் மலர்க் கணைகளை வெற்றிக் கொண்ட,சிதறிய சிவந்த கோடுகள் படர்ந்த செழுமையான கடைக்கண்கள் தான் முன்பு தூது வந்து காதல் நோயைத் தந்தது.இப்போது,அதே கடைக்கண் பார்வை,இந்த மாலை வேளையில் என் தீராத நோயைத் தீர்த்து,என்னை வாழ வைக்கும் மருந்தாக விளங்குகிறது!’,என போற்றுகிறான் ஒரு வீரன்.

பெரிய பழம் போன்ற வாயில்,பவளம் போன்ற சிவந்த உதடுகள் இடையில் புன்சிரிப்பு என்னும் இளைய நிலா ஒளிர்கின்றது!கருமையான கயல் மீன்கள் போன்ற கண்கள் அசையும் அழகிய காட்சித் தெரிகிறது!.திருந்திய பற்கள் இடையில் விருந்தாக புன்சிரிப்பு அரும்புகிறது!மாந்தளிர் போன்ற மேனியை உடைய அத்தகைய பெண்கள்,அணிகலன் அணிந்த மார்பைத் தங்கள் காதலர்களான இளையவர்களுக்கு அளித்து மகிழ்ந்தார்கள்.

குறிப்பு

 1. முகில்-மேகம்
 2. முரி(ந்த)-வளைந்த
 3. சிலை-வில்
 4. மகரக் கொடியோன்-மீன்கொடி உடைய மன்மதன்
 5. சிதரரி-சிதரிய கோடு (சிதர்-சிதறிய:அரி-கோடு)
 6. செழுங்கடை-செழுமையான கடை
 7. ஏத்த-போற்ற
 8. இருங்கனி-பெரிய பழம் (இரும்-பெரிய)
 9. துவர்வாய்-பவளம் போன்ற வாய் (துவர்-பவளம்,சிவப்பு)
 10. காமர்-அழகு
 11. செவ்வி-நேர்காணல்
 12. எயிறு-பல்
 13. மூரல்-முறுவல்,புன்சிரிப்பு
 14. மடவோர்-மடம் பொருந்திய பெண்கள்

dp

 - மீனாட்சி தேவராஜ்

meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>