சிலம்பில் ஈடுபட்டதெப்படி – முன்னுரை – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

“சிலம்பில் ஈடுபட்டதெப்படி,” என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம்.எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும்.நான், ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டுகாலம் அடைபட்டிருந்தபோது, என் உடம்பு கரைந்து கரைந்து -எலும்பு இளைத்து இளைத்து மரண அபாயத்துக்குள்ளானேன். அந்த நிலையில் வடநாட்டுப்பருவநிலை என் உடம்புக்குப் பொருந்தவில்லை … தொடர்ந்து வாசிக்க

( 1 ) கருத்துகள்

மாதவியின் மாண்பு முடிவுரை – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

மாதவி பரத்தையர் குலத்தில் பிறந்த நடனக் கணிகையாயினும், தன்னளவில் கோவலன் ஒருவனையே நேசித்து வாழ்ந்ததோடு, பிறிதொரு ஆடவனை நெஞ்சாலும் நினையாத ஒழுக்கத்தினைக் கடைப் பிடித்தாள்.கோவலனோடு வாழ்ந்த காலத்தில்,அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர் கோடலும் ஆகிய குலமகளுக்குரிய இல்லற நெறிகளைக் கடைப்பிடித்தாள்.கோவலன் கொலையுண்டு மாண்ட செய்தி கேட்ட பின்னர், … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சாத்தனார் கண்ட மாதவி – சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.

வழக்கம்போலப் பூம்புகாரில் இந்திர விழா நடை பெறுகின்றது. முன்பெல்லாம் இந்திர விழாவிலே,ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ள அவையிலே மாதவி நல்லாள் நாட்டியமாடுவாள். அவளுக்கு ஒரு மகள் பிறந்து, ‘மணிமேகலை’ எனப் பெயர் தாங்கிய அந்தக் கட்டிளங்கன்னி நடனக்கலை பயின்று ஆடத் தொடங்கிய பின்னர், மாதவி நாட்டியத் தொழிலிலிருந்து விலகிவிட்டாள். அத்துறையில்தான் பெற்றிருந்த எல்லையற்ற செல்வாக்கை தன் மகள் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்