புகார்க் காண்டம்-மங்கல வாழ்த்துப் பாடல் (எளிய விளக்கம்:பகுதி 2)

3.கண்ணகி (கதை நாயகியான கண்ணகியைப் பற்றிய அறிமுகம்.) -அதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள், அவளுந்தான், போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும் மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ பூம்புகாரில் வானத்து மழையைப் போல வளமை வாய்ந்த கொடைத் தன்மையை … தொடர்ந்து வாசிக்க

Tagged , , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகார்க் காண்டம் -மங்கல வாழ்த்துப் பாடல்(எளிய விளக்கம்:பகுதி 1)

புகார்க் காண்டம் -மங்கல வாழ்த்துப் பாடல் 1.போற்றுவோம் திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகுஅளித்த லான். மகரந்தம் சிந்தக்கூடிய மலர் மாலையினை உடையவன் சோழன்.அவனது அருள் மிகுந்த வெண்கொற்றக் குடையினைப் போல,இந்த உலகிற்குக் குளிர்ச்சி தருவதால் நாம் சந்திரனைப் போற்றுவோம். குறிப்பு ———- 1.திங்கள்-சந்திரன். 2.தார்-ஆண்கள் அணியும் கழுத்து … தொடர்ந்து வாசிக்க

Tagged , | உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலம்பில் ஈடுபட்டதெப்படி:3-சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம்

புதிய தமிழகம்: இளங்கோவும் சாத்தனாரும் சேர்ந்திருந்த போது,‘முடிகெழுவேந்தர் மூவர்க்குமுரியது அடிகள் நீரே அருளுக’ என்று சாத்தனார் கூறக் கேட்கிறோம் பதிகத்திலே!தமிழினமே ஒன்றுபடு என்னும் கோஷத்துடன் தமிழரசுக் கழகத்தைத் தோற்றுவித்து புதிய தமிழகம் படைக்கப் புறப்பட்ட காலத்தில் சிலப்பதிகாரத்தைப் படித்தேன்.அதனாலும் மன்னர்வழி மூவேறு மண்டலங்களாகப் பிரிந்து கிடந்த தமிழகத்தை அடிகள் ஒன்றுபடுத்தியது ஐக்கிய தமிழகம் படைக்க விரும்பிய … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்