மாதவியின் மாண்பு – முன்னுரை

சேரமாமுனி இளங்கோவடிகள் யாத்தருளிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய தலைக்காப்பியமாகும். காப்பியம் முழுவதிலும் கண்ணகியே நாயகியாக விளங்குகின்றாள். ஆயினும் புகார்க் காண்டத்தின் துவக்கத்தில் உள்ள மங்கல வாழ்த்துப்பாடல், மனையறம்படுத்த காதை ஆகியவற் றோடு கண்ணகி – கோவலன் வாழ்க்கை நின்றுவிடுகின்றது. அதற்கு மேலே ஆறு காதைகளில் கோவலன் மாதவியோடு கூடி வாழ்க்கை நடத்துகின்றான். இதனால் புகார்க் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரப் புகழ் பரப்பிய வரலாறு

சிலப்பதிகார இயக்கம்: சிலப்பதிகார மாநாடுகள், சிலப்பதிகார வகுப்புகள்,சிலப்பதிகாரப் பேருரைகள், ஆய்வுகள் மூலமாக சிலப்பதிகார இயக்கத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. தமிழ் இலக்கியங்கள் பற்றிய மாநாடுகள், ம.பொ.சி.யின் சிலப்பதிகார இயக்கத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளன.ஆனால் சிலப்பதிகாரத்திற்காக முதன்முதலில் மாநாட்டை ம.பொ.சி.தான் நடத்தினார். 24.3.1951 அன்று சென்னை,இராயப்பேட்டையில் கண்ணகி பந்தலில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,பேரறிஞர் ரா.பி. … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

புகாரில் ஒரு நாள்

காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரையில் அன்றொருநாள் பூவிரியும் சோலைகளின் புதுமணத்தை அள்ளியுண்டு மாலை பொழுதினிலே மணற்பரப்பின் மேலமர்ந்து தாலை அசைத்தொரு தமிழ்ப்பாட்டு பாடலற்றேன் பாட்டின் சுவையாலோ பைந்தமிழின் திறத்தாலோ கூட்டும் எழிலெல்லாம் கொண்டவிளம் பெண்ணொருத்தி இளநகை காட்டியென்றன் எதிரிலே வந்துற்றாள்! குளக்கமல முகமலரக் கொவ்வை இதழ்துடிக்க வணக்கம் எனவுரைத்து வளர்க்காந்தன் கரங்குவித்தாள்! இணக்கமுறும் அவளழகில் ஈடுபட்டுப் பேசலுற்றேன்; … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்