தலைக்கோல் வரலாறு – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

மாதவியின் நாட்டிய அரங்கேற்று விழாவிலே அவளுக்கு வழங்கப் பெற்ற தலைக்கோலுக்கே தனி வரலாறு உண்டு.போரிலே தோற்றுப் புறமுதுகிட்ட பகை அரசரிடமிருந்து பறிக்கப்பெற்ற வெண்கொற்றக் குடையின் கோலினை, பழுதடையாத நிலையில் பார்த்தெடுத்து,அக்கோலின் ஒவ்வொரு கணுவிடத்தும் இலக்கணத்தோடு அமைந்த நவமணிகளைக் கட்டி அழகுபடுத்துவர். ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்கும் இடைப்பட்ட பகுதியில், ‘சாம்பூநதம்’ என்னும் உயர் தரமான பொன்னால் … தொடர்ந்து வாசிக்க

( 2 ) கருத்துகள்

நடன அரங்கின் இலக்கணம் – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

அந்நாளில், நடனமாடும் அரங்கம் இப்படி இப்படி அமைந்திருக்கவேண்டுமென்ற இலக்கணம் உண்டு. சிற்ப நூலில் சொல்லியுள்ளபடி அமைந்ததொரு அரங்கிலேதான் மாதவி நல்லாள் நாட்டிய மாடினாள்.நடன அரங்கை நிறுவும் முறைபற்றிச் சிலப்பதிகாரம் கூறும் இலக்கணம் வருமாறு: பொதிய மலை போன்ற உயர்வான புனித மலைகளிலே உயரமாக வளர்ந்த மூங்கில்களிலே ஒரு கணுவுக்கும் இன்னொரு கணுவுக்கும் நடுவே ஒரு சாண் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மாதவியின் ஆசிரியர்கள் (ஆடலாசான், இசையோன், நன்னூற் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோன், யாழோன்) – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

மாதவிக்கு நாட்டியமும் அதனோடு தொடர்புடைய பிறவும் கற்றுத் தந்தவர்களைப்பற்றித் தனித்தனியே விரிவாகக் கூறியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர்.ஆடலாசான், இசையோன், நன்னூற் புலவன், தண்ணுமை முதல்வன், குழலோன், யாழோன் ஆகியோராவர். ஆடலாசான்: மாதவிக்கு ஆடல் பயிற்றுவித்த ஆசானைப் பற்றிக் கூறுகையில், “இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்தோன்; மற்றும் பலவகைக் கூத்தும் பதினொரு ஆடலும் பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையும் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்