சிலம்பிலே சித்திராபதி இல்லை – ஏன்?

‘மாதவி’ என்னும் மங்கை நல்லாள் ஈன்ற தாயின் பெயர் ‘சித்திராபதி’ என்கின்றது.கூலவாணிகன் சாத்தனார் யாத்தளித்த ‘மணிமேகலைக் காப்பியம்’. ஆனால், சிலப்பதிகாரத்தில், மாதவியை வயிறாரச் சுமந்து பெற்றெடுத்த அன்னையின் பெயர் கூறப்படவில்லை. சிலப்பதிகாரக்கதை முழுவதிலும் மாதவியின் தாய் நடமாடவே இல்லை. அவளைத் திரையிட்டு மறைத்துவிட்டார் ஆசிரியர் இளங்கோ.மாதவியின் ஒழுக்கத்திற்கு இழுக்கு வராமல் காக்க இது தேவைப்பட்டுவிட்டது போலும்.‘மணிமேகலை’க் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

மாதவியின் பிறப்பு – சிலம்புச் செல்வர் ம.பொ.சி

சோழ மண்டிலத்தின் தலைநகராக விளங்கியது புகார். அது, ஆசியாக் கண்டத்தின் மிகச் சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் திகழ்ந்தது. ‘பூம்புகார்’ – ‘காவிரிப்பூம்பட்டினம்’ என்னும் பெயர்களையும் தாங்கி, புகழ் பெற்று விளங்கியது புகார்ப் பகுதி. இந்த உலகம் கடல் நீரை அகழாகக் கொண்டு விளங்குகிறதென்றால்,பூம்புகார் நகரம் புகழை அகழாகக் கொண்டு வாழ்ந்தது என்பதனை,”வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் … தொடர்ந்து வாசிக்க

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

சோழ மண்டிலத்தின் சிறப்பு – சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

தமிழகம், கலைகளின் தாயகம்; இயல், இசை,நாடகம் என மொழியை மூன்றாக வகுத்த முதலிடம் பாட்டாளி மக்களும் பாடித் தொழில் புரியும் பழம் பெரும் நாடு, அகிலத்தை ஆட்டுவிக்கும் ஆண்டவனும் ஆடும் கூத்தனாகக் காட்சியளிக்கும் அருமைத் திருநிலம். இத்தகைய பெருமைகளைப் பெற்ற தமிழகத்தின் ஒரு பகுதியாக – தனியரசாக விளங்கியது சோழ மண்டிலம்.சோழ மண்டிலம், வான் பொய்ப்பினும் … தொடர்ந்து வாசிக்க

( 1 ) கருத்துகள்