சிலம்புச்செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி.
சிலப்பதிகாரம்.காம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் பயன்படுத்தி பண்டை தமிழரின் வாழ்கை,நாகரிகம்,அரசியல் ஆகியவற்றை சிறப்பாக கூறும் 'குடிமக்கள் காப்பியம்' சிலப்பதிகாரம். பெண்ணின் பெருமையை முதன் முதலாகக் காப்பிய வடிவில் உணர்த்தியதோடு பெயரமைப்பிலும் புரட்சிக் காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம்.

சேர, சோழ, பாண்டிய நாடுகளின் பெருமைகளையும் முறையே ஒரு சேர எடுத்துரைக்கும் ஒரே காப்பியம் சிலப்பதிகாரம். பல சமைய அறங்களையும் கூறும் காப்பியம். இப்படி தோண்ட தோண்ட தமிழரின் பல சிறப்புக்களை தன்னுள் கொண்ட நூல் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் ஆகும்.