மாதவி ஒரு பார்வை

பொன்னின் மணியோ புகழ்விட்ட நெஞ்சோ
கண்ணின் மணியென கார் சூழ் உலகில்
மென்மை வடித்த மேன்மை வடிவினாள்
பொய்மை நிறை உலகின் பொதுமகள்

வாய்மொழி செம்மை வாழ்விலும் கோவலன்
சேய்க்கு மொழி செப்பிய சீர் மிகு சிறப்பினள்
அன்னைக்கு அன்னை முன்னை பெருமகள்
பின்னைக்கு ஒருவர் இற்றைக்கும் இலரே

மணிமேகலையின் மாசறு தாயவள்
அணி செய் இலக்கணம் அன்றே சேற்றில்
செந்தாமரை விந்தை உலகின் விசித்திரமாற்றம்
வந்தார் வரவேற்பில் புதிய வாயில்

இளங்கோ படைத்த மனித நேய இலக்கு
கலங்கும் பெண்டிருக்கு காலக் கலங்கரை
துலங்கும் பெண்டிருக்கு தூய முன்னோடி
விளங்குக பெண்டிர் விண்மாதவி போலயீங்கு

-கவிஞர் ஆரா

கவிஞர் ஆரா,மேனாள் வங்கி அலுவலர்.தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று உடையவர்.மக்கள்,கலைஞர்,தந்தி தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்கிறார். கல்கி,நா.பா,தேவன்,ஜெகசிற்பியன்,ஜெயகாந்தன்,சுஜாதா,பாலகுமாரன்,இந்துமதி, எஸ்.ராமகிருஷ்ணன்,கனடா அ.முத்துலிங்கம் ஆகியோர் கவிஞர் ஆராவை கவர்ந்த எழுத்தாளர்கள்.

This entry was posted in சிலப்பதிகார கவிதைகள். Bookmark the permalink.

One Response to மாதவி ஒரு பார்வை

 1. கவிஞர் ஆரா says:

  இ ன்று கீர்த்தி பெற்றேன் இனிய காலை ஆக உணர்ந்தேன் இம்மைக்கும் மறுமைக்கும் ஒரு நூலே இடைவெளி

  —–வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்து செங்கோலாக்கியது —–

  —கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்—

  அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்

  இன்ன மும் சொல்லிட என்ன இதய மலர் நன்றி
  கால பூக்களில் கவிக் கோலம் இட்டேன்
  வேளை வரும் போது வரும் போலும்
  நீள் கனவே நெடு நாள் உவப்பின்று உணர்கின்றேன்

  காலத்தால் உதிர் மலர் ஆரா ஆகிய நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>