மதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)

apklogoஅழற்படு காதை

8.வீதிகள் எரிந்தன

apk5b
கூல மறுகும் கொடித்தேர் வீதியும்,
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
(உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்)
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்ட-

தானியம் விற்கும் கடைவீதி,கொடி கட்டிய தேர்கள் செல்கின்ற தேர்வீதி,’பிராமணர்,அரசர்,வணிகர்,வேளாளர்’,எனும் நால்வகை வேறுபட்ட மக்கள் வாழும் தெருக்கள் மதுரையில் இருந்தன.இவை,வலிமையான குரங்கான அனுமனை தன் கொடியில் வைத்திருந்த,வில் ஆற்றலில் வல்லவனாகிய அர்ஜுனன் காண்டாவனத்தைத் தீயில் எரித்த போது,அந்த காடு எரிந்தது போல முழுதும் எரிந்து சாம்பல் ஆயின.அறநெறி உடையவர்கள் வாழும் இடங்களில் நெருப்பு தலை காட்டாமல் ஒதுங்கியது.ஆனால் தீயவர்கள் வாழும் பகுதியில் அவர்கள் கலங்குமாறு பெரிதாக எழுந்து தீ மண்டியது.

குறிப்பு

 1. கூலம்-தானியம்
 2. மறுகு-தெரு
 3. உரக்குரங்கு-வலிமையான குரங்கான அனுமன்
 4. ஒண்-ஒள்ளிய,ஒளிர்வுமிக்க
 5. சிலை-வில்
 6. உரவோன்-வலியவன்
 7. கா-காடு
 8. மருங்கு-பக்கம்
 9. அழல்-நெருப்பு
 10. அறவோர்-முனிவர்,அறநெறி உடையவர்கள்
 11. மறவோர்-தீயவர்கள்
 12. சேரி-மக்கள் வாழ்ந்த இடங்கள்

9.விலங்குகள் ஓடின

apk5a

கறவையும் கன்றும் கனலெரி சேரா,
அறவை யாயர் அகன்றெரு அடைந்தன
மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன

பால் தரும் பசுக்களும்,அவற்றின் கன்றுகளும்,கொளுத்துகின்ற தீயில் அகப்படாமல் இருக்க,அறம் உடைய இடையர்கள் வாழும் பெரிய தெருக்களைச் சென்று சேர்ந்தன.பேராற்றல் உடைய ஆண் யானைகளும்,பெண் யானை கூட்டங்களும்,விரைந்து பாயும் குதிரைகளும்,நகரின் மதில் புறத்திற்கு வெளியே ஓடி உயிர் பிழைத்தன.

குறிப்பு

 1. கறவை-பால் தரும் பசு
 2. கனல்-தீ
 3. அறவை-அறம் உடைய
 4. ஆயர்-இடையர்,ஆடு,பசு,எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்.
 5. அகன்-அகன்ற
 6. வெங்களிறு-மதயானை. (களிறு-ஆண் யானை)
 7. மடப்பிடி-பெண் யானை
 8. நிரைகள்-வரிசைகள்

dp

 - மீனாட்சி தேவராஜ்

தொடர்புக்கு: meenbas16@yahoo.co.in

This entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>